சசிகலாவை என்.டி.ஏ கூட்டணியில் இணைப்பது குறித்து முடிவெடுக்கும் தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது - பொள்ளாச்சியில், அண்ணாமலை பேட்டி

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று இரவு பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று இரவு பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

முன்னதாக, அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்:

சசிகலா விடுதலை குறித்து கருத்து கூறும் நிலையில் பாஜக இல்லை, அதிமுகவுடன் அமைந்துள்ள கூட்டணி குறித்து பாஜக நிர்வாகி ஜே.பி நட்டா தெளிவாக அறிவித்துள்ளார். அப்படி இருக்கும் பட்சத்தில், சசிகலா விடுதலை குறித்து என்ன நடக்கும் என்பது பற்றி பாஜகவுக்கு தொடர்பு கிடையாது. இதற்கு அதிமுக தான் கருத்து கூற வேண்டும். இது தொடர்பான முடிவு எடுக்க வேண்டிய தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது.

என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தில் ஒரு பெரிய கட்சி அதிமுக, அவர்கள் அறிவித்த வேட்பாளரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். இதில், பாஜகவுக்கு எந்தவித குழப்பமும் இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் ஆட்சியில் அமரும். எல்லா அரசியல் தலைவர்களுக்கும் தங்களது கட்சி சார்பாக கருத்துக்கள் கூற உரிமை உள்ளது.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரை கால் சென்டர் மூலமாக முன்னதாகவே ஒரு லட்சம் புகார்களை வாங்கியுள்ளார். அதற்கான, வெள்ளை அறிக்கையை அவர் இதுவரை வெளியிடப்படவில்லை. கிராம சபை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதற்கும் எந்தவித விளக்கமும் இல்லை.

இந்நிலையில், தற்போது மூன்றாவதாக புகார் பெட்டி வைக்கும் திட்டத்தை அறிவித்து உள்ளார். இதே போன்ற நாடகங்களை போன சட்டமன்றத் தொகுதி தேர்தலில், ஏற்கனவே பின்பற்றி உள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது மக்கள் மத்தியில் திமுக வெற்றி வாய்ப்பையும், நம்பிக்கையையும் இழந்து விட்டார்கள், என்பது தெளிவாக தெரிகிறது, என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...