பா.ஜ.க கண்டன ஆர்பாட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு..!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க கண்டன ஆர்பாட்டத்தில், கல் வீச்சில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க கண்டன ஆர்பாட்டத்தில், கல் வீச்சில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தின் போது பிரதமர் மோடியை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யததாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க சார்பில் இன்று மாலை அபிராமி திரையரங்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது..

இந்த கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கல்வீச்சு மற்றும் ரகளையில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.



இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மறியலி்ல் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...