திருப்பூர்: பல்லடம் வட்டத்தில் இடுவாய், அறிவொளி நகர், கோடங்கி பாளையம், கேத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக் மையத்தை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தில் இடுவாய், அறிவொளி நகர், கோடங்கி பாளையம், கேத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக் மையத்தை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், அம்மா மினி கிளினிக் துவக்கவிழா மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார்.

மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்களையும் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் தேவையான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது. தற்பொழுது துவங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக் மையமும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மக்கள் பயன்பெற வேண்டும் எனவும் அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.