திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம், அலகுமலையில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில், 4-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

இந்த போட்டியில் 749 காளைகள், 555 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு கால்நடைத்துறை சார்பில் மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். கொரோனா பரிசோதனை சான்றுடன் வந்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 12 மாடுகள் பிடித்த நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசாக பைக் பரிசாக பெற்றார். இரண்டாம் பரிசாக மொபட் வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சவுடு, மூன்றாம் பரிசு ஒரு பவுன் தங்கசெயின் சிவகங்கை ஆதீஸ்வரனுக்கும் வழங்கப்பட்டது.
முதல் மாடு பரிசு தாராபுரம் விவேக் மோட்டார் பைக்கும், இரண்டாம் மாடு பரிசு லால்குடி பெலிக்ஸ் மொபட்டும், மூன்றாம் மாடு பரிசு ஜல்லிக்கட்டு ராஜசேகர் ஒரு பவுன் தங்க செயினும் வழங்கப்பட்டது.

மேலும், பங்கேற்ற அனைவருக்கும் அண்டாக்கள், வேட்டி, துண்டு, டி-சர்ட்டுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.