கோவை: மகாத்மா காந்தி, நேதாஜியின் போராட்ட பாரம்பரியத்தில் உருவான தேசத்தை மக்கள் விரோத அரசிடமிருந்து பாதுகாப்போம், என்கிற கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாவட்டம் முழுவதும் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாகன பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் விரோத அரசை அகற்றுவோம், தேசம் காப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து இந்திய நாட்டின் ஆகப்பெறும் ஆளுமைகளான மகாத்மா காந்தியின் 73 ஆவது நினைவு தினம், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125 ஆவது பிறந்த தினத்தில் பிரச்சார இயக்கத்தை முன்னெடுப்பது என்கிற அடிப்படையில் கோவை மாவட்டம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பிரச்சார இயக்கத்தை நடத்தியது.
கோவை காந்திபுரத்தில் துவங்கிய வாகன பிரச்சாரத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின்குமார் தலைமை தாங்கினார். இந்த பிரச்சார இயக்கத்தில், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக இந்த பிரச்சார இயக்கம் கோவை கிழக்கு, வடக்கு, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிக்குழுக்களில் மேற்கொள்ளப்பட்டது.
"இந்திய நாட்டு பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சரம் என இந்திய நாட்டின் பன்முகத்தை சீரழிக்கும் நடவடிக்கையை எதிர்ப்போம். நாட்டின் பொருளாதர வீழ்ச்சி, வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விவசாயிகளின் நலனை கார்ப்ரேட்டுகளிடம் அடகு வைத்து உணவுக்கு கையேந்தும் நிலையை உருவாக்கும் தீவிர முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது", போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இந்த பிரச்சார இயக்கத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாரதி, மாவட்ட பொருளாளர் வி.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.
"தேசம் காப்போம்" பிரச்சார இயக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பியும், துண்டறிக்கை விநியோகித்தும் பங்கேற்றனர்.