ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி ஒதுக்க வேண்டும் - கொ.ம.தே.க ஈஸ்வரன் வலியுறுத்தல்!

கோவை: ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி ஒதுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ER ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி ஒதுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ER ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.



பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் தேர்தல் வாக்குறுதியாக தான் மாறியுள்ளது. ஐந்து ஆண்டுகளில் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பி ஏமாந்தது தான் மிச்சம், இனியும் இந்த திட்டத்தை தாமதப்படுத்தாமல் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

அதேபோல, பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கை, தமிழகத்தில் குறைந்த மக்கள்தொகை உள்ள பல்வேறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிக மக்கள் தொகை கொண்ட பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க ஏன் தயங்குகிறார்கள்?, தாமதப்படுத்தாமல் உடனடியாக பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டங்களும், கடையடைப்புகளும் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

மேலும், இட ஒதுக்கீடு கேட்டு தேர்தல் நேரத்தில் பாமக அதிமுகவை மிரட்டுகிறார்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் மிகவும் இறங்கிப் போய் பாமகவிடம் பேசுவதை தொண்டர்கள் விரும்பவில்லை, ஒருபக்கம் பாஜக மிரட்டுகிறது. தேமுதிக மிரட்டுகிறது, எப்படி இருந்த அதிமுகவின் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள். எப்படி கூட்டணி அமைந்தாலும் தேர்தல் வேலை பார்க்க அதிமுக தொண்டர்கள் தயாராக இல்லை என்று கூறினார்.

சசிகலா முழுமையாக களம் இறங்கும் போது அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் மிகப்பெரிய சலசலப்பு ஏற்படும் என்று தெரிவித்த ஈஸ்வரன், பொள்ளாச்சியில் பாலியல் பிரச்சனை மட்டும்தான் பேசப்படுகிறது, கட்டமைப்பு வசதிகளை பற்றி யாரும் பேசுவதில்லை பாலியல் குற்றத்தை பொருத்தவரை அரசு நினைத்திருந்தால் என்றைக்கோ முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்பிரச்சனைக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்திருப்பார். தற்போது சிலரை காப்பாற்ற நினைப்பதால் தான் தீர்வு காண முடியவில்லை, பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்காமல் மற்ற பணிகளில் கவனம் செலுத்தாமல் மொத்தத்தில் பொள்ளாச்சி முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...