பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் போது நானும் போட்டுக்கொள்வேன் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

கோவை: பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் போது நானும் போட்டுக்கொள்வேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.


கோவை: பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் போது நானும் போட்டுக்கொள்வேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.



கோவை மருதமலை முருகன் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொராேனா வைரஸ் தொற்றிலிருந்து உலகம் விடுபடவேண்டும் என்று நேற்று பழனியில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மருதமலை வந்துள்ளேன். தற்போது கொரோனாவில் இருந்து விடுபட்டு தடுப்பூசி நுழைந்து இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் பெருமைப்பட வேண்டும். சென்ற ஆண்டு நாம் அனைவரும் அச்சத்திலேயே இருந்தும். இந்த ஆண்டு அச்சத்தில் இருந்து விடுபட விஞ்ஞானிகள் வழிவகை செய்து இருக்கிறார்கள். அதற்காக நாம் அனைவரும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.

அதேபோல, முன் கள பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படுகிறது. இது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி ஊசியாக போடப்படுகிறது. இது பரிசோதனை அல்ல, இது அவர்களுக்கு அளிக்கும் பரிசு என்று தான் நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

மேலும், மருத்துவராக மட்டும் நான் பணியாற்றி இருந்தால் நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பேன். தற்பொழுது ஆளுநராக இருப்பதால் பொதுமக்களுக்கு போடும் பொழுது நானும் போட்டுக் கொள்வேன். தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்ததற்கு முதலமைச்சருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கொரோனாவில் இருந்து மிக விரைவாக நாம் மீண்டு வந்ததற்கு பொதுமக்களுக்கும் வழிகாட்டிய மத்திய அரசு மற்றும் அதனை செயல்படுத்த மாநில அரசுகளுக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...