கோவை: கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.

நாடு முழுவதும் 5 வயது குழந்தைக்குட்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.

கோவையில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இளம்பிள்ளைவாதம் போலியோவை ஒழிக்க நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் செயல்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனை, அரசு சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரி, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ரோட்டரி கிளப் நடத்தும் முகாம்கள் என மொத்தம் 346 இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் 5 சிறப்பு முகாம் மற்றும் மூன்று நடமாடும் மையங்கள் செயல்பட உள்ளது. மருத்துவத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், ரோட்டரி கிளப்பினர் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், இன்று நடைபெறும் முகாம்களில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 251 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.