கோவை: கோவை மைலேரிப்பாளயத்தில் உள்ள உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் மனநிலை வியாதியில் இருந்து மீண்ட நபர்களுக்கு மீண்டும் மறு வாழ்வு அமைக்க பரிவர்த்தன் திட்டத்தின் மூலம் இலவசமாக தையல் இயந்திரங்கள் மற்றும் ஆடுகளை வழங்கியது.

இந்த நிகழ்ச்சியினை உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பப்பா வித்யாகர் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக லஞ்ச ஒழிப்பு அமைப்பின் செயலர் என்.கே.வேலு, பொள்ளாட்சியினைச் சேர்ந்த பல் மருத்துவர் எஸ்.மனோகரன், குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை சமூகப் பணித்துறை தலைவர் முனைவர்.அ.அழகர்சாமி, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஆர்.சுந்தர், திருப்பூரில் உள்ள மைண்ட் விஷன் மனநல மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் மனநல மருத்துவர் கே.வெங்கடேஷ்குமார் கலந்துகொண்டு தையல் இயந்திரங்கள் மற்றும் ஆடுகளை மனநல வியாதியில் இருந்து மீண்ட நபர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினர்.
இந்த உதவும் கரங்கள் அமைப்பு பரிவர்த்தன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கோவை மற்றும் நீலகிரியில் உள்ள பல்வேறு கிராமங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து இவர்களுக்கு இலவசமாக மனநல சிகிச்சையினை வழங்கி வருகிறது. இச்சிகிச்சையினை மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் மூலம் குணம் அடையும் வரை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதன் மூலம் சீர்திருத்தப்பட்டவர்கள் பொருளாதார முன்னேற்றம் மற்றும் மனப் பிரச்சனைகளை மறக்க இலவசமாக தையல் இயந்திரங்களை மற்றும் ஆடுகளை வழங்கி மறுவாழ்வு அளிக்கிறது. கடந்த எட்டு வருடமாக இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இவ்வருடம் நடந்த இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தானம் வழங்கியது. இதன் மூலம் மனப் பிரச்சனைகளை மறக்க மறுவாழ்வு அமைக்க நூதன முறையில் செயல்படுகிறது.
இத்திட்டத்தின் இயக்குனர் ரத்தன் வித்யாகர் மற்றும் இவ்வமைப்பின் அலுவலர்கள் கலந்துகொண்டு நடத்தினர். மேலும், இது போல மன வியாதிகளால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக சிகிச்சை அளிக்க முடியாமல் இருப்பவர்கள் இத்திட்டத்தின் நிறுவனர் ரத்தன் வித்யாகரை கீழ்க்கண்ட அலைபேசியில் 9994146610 அழைத்து இலவச சிகிச்சையினை பெற்றுக்கொள்ளலாம்.