திருப்பூர் அழகுமலையில் களைகட்டியது ஜல்லிக்கட்டு..!

திருப்பூர் அழகுமலையில் களைகட்டியது ஜல்லிக்கட்டு..!



திருப்பூர் மாவட்டம், அலகுமலையில், ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில், 4-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். 



ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். 



இந்த போட்டியில் 1040 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்குபெற்றுள்ளனர். இந்த காளைகள் நேற்று காலை முதலே வரத் தொடங்கின.

போட்டிக்காக அலகுமலை அடிவாரத்தில் வாடிவாசல் மற்றும் 400 அடி நீளத்தில் வாடிவாசலில் இருபுறமும் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு காயம் படாமல் இருக்க தேங்காய் நார் (மஞ்சு) தரையில் தூவப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

அதுபோல், போட்டியை காண வரும் பார்வையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த வரும் வழிகளில் வாகன நிறுத்தங்கள் போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டின் போது வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு கொண்ட மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த காளைகளுக்கு கால்நடைத்துறை சார்பில் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் மாடுபிடி வீரர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்றுடன் வந்தால் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள, என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளுக்கும் பரிசாக 2 மொபட்டுகள், பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் சார்–பில் 400 அண்டாக்கள், வேட்டி, துண்டு,டி-சர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. 

மேலும் இந்த போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு போட்டி நடைபெறும் இடத்தை சுற்றிலும் 6 இடங்களில் அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி கழிப்பிட வசதி ஆகியன செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியை காண திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...