கோவை: பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகள், மயில், மான், குரங்குகள், வனவிலங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி வேண்டும் என்று கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்தனர்.
கோவை: பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகள், மயில், மான், குரங்குகள் போன்ற வனவிலங்குகளை கொல்வதற்கு, அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
இந்திய நாட்டின் தேசியப் பறவையான மயிலை கொல்வதற்கு அனுமதி கேட்ட விவசாயிகளினால் பரபரப்பு எற்பட்டது
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான விவசாயிகள் கோரிக்கை மாநாடு, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரமடை அருகே உள்ள திம்பம்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர் விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், விவசாயம் குறித்து வரும் சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
பயிர்களைக் காக்கும் வகையில், விலங்குகளை, தடுக்கவும், கொல்லவும் அனுமதியளிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கைகளாக, யானையைத் தவிர பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகள், மயில், மான், குரங்குகள் போன்றவற்றின் அதிக அளவிலான எண்ணிக்கையைக் குறைக்கவும், பயிர்களைக் காக்கும் வகையில், அந்த விலங்குகளை, விவசாய நிலத்திற்குள் வரவிடாமல் தடுக்கவும், அதிகபடியாக அவற்றைக் கொல்லவும் விவசாயிகளுக்கு அனுமதியளிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோரிக்கைகள்
மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தைக் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயத்தைப் பாதுகாக்க அந்தத் திட்டத்தை முழுமையாக விவசாயத் தொழிலுக்கு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மற்ற கோரிக்கைகளை மாநாட்டில் ஆலோசித்து அறிவிக்கப்படும், என தெரிவித்துள்ளனர்.
மாநாட்டுக்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.எஸ்.ரங்கசாமி தலைமை தாங்கினார்.மாநிலத் துணைத்தலைவர் ஹரிமூர்த்தி, கோணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், கோவை மாவட்ட தலைவர் வேலுசாமி, மாநிலச் செயலாளர் உதயகுமார், ரகுபதி, மாரியப்பன், குப்பண்ணமுத்து, லோகநாதன் ராமதாஸ், ரவீந்திரன், ஆனந்த ரெட்டியார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.