கோவையில், யானை தாக்கி அ.தி.மு.க. பிரமுகர் சாவு: சின்னராஜ் எம்.எல்.ஏ. அஞ்சலி!

கோவை: மோட்டார் சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. பிரமுகரை எதிரே வந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் செய்தி கேட்டு சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னராஜ் எம்.எல்.ஏ. நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: மோட்டார் சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. பிரமுகரை எதிரே வந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் செய்தி கேட்டு சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னராஜ் எம்.எல்.ஏ. நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

லிங்காபுரம்பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள்செயலாளர் சம்பத்குமார் (வயது 59). அவர் இன்று மாலை 5 மணி அளவில் தனது தோட்டத்திலிருந்து லிங்காபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வனப்பகுதிகளில் சென்றபோது காட்டு யானை அவரை வழிமறித்து தாக்கியதில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் நாவீந்தன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்குச் சென்ற மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், சிறுமுகை பேரூராட்சி செயலாளர் ரவிக்குமார் மற்றும் லிங்காபுரம் சாமியப்பன் கனகராஜ் ஆகியோர் சம்பத்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

சம்பத்குமாருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், நிவாஸ் என்ற மகனும் உள்ளனர். இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் அ.தி.மு.க.வினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...