திருப்பூர்: திருப்பூரில் 4 பள்ளிகளைச் சேர்ந்த 1962 மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சு.குணசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 4 பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்.எல்.ஏ. சு.குணசேகரன் வழங்கினார்.கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் 549 மாணவர்களுக்கும், திருப்பூர் நஞ்சப்பா நகரவை ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 350 மாணவர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்த விழாவில் 1,121 மாணவிகளுக்கும், விஜயாபுரம் அரசு பள்ளியில் நடைபெற்றமிதிவண்டிகள் வழங்கும் விழாவில் 141 மாணவ மாணவிகளுக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்.எல்.ஏ. சு.குணசேகரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.