வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணி: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வெள்ளலூரில்‌ ரூ 168.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்‌ புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வெள்ளலூரில்‌ ரூ 168.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்‌ புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வெள்ளலூரில்‌ ரூ.168.4 கோடி மதிப்பீட்டில்‌ 61.62 ஏக்கர் பரப்பளவில்‌ புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்‌ கட்டப்பட்டுவரும்‌ பணிகள்‌ குறித்தும்‌, வெள்ளலூர்‌ உரக்கிடங்கில்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனிஅலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌‌ இன்று ஆய்வு செய்தார்.



பேருந்து நிலைய கட்டுமான பணிகளின்‌ பல்வேறு நிலைகள் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கழிப்பிடம்‌, குடிநீர்‌ வசதி, வாகனங்கள்‌ நிறுத்துமிடம்‌ ஆகிய கட்டுமானப்‌ பணிகள்‌ குறித்தும்‌ கேட்டறிந்தார். இதையடுத்து பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்‌.



இதைத்தொடர்ந்து வெள்ளலூர்‌ உரக்கிடங்கில்‌ மக்கும்‌ குப்பைகளைக்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தையும்‌, காய்கறி கழிவுகளைக்‌ கொண்டு மண்புழு உரம்‌ தயாரிக்கும்‌ மையங்களையும்‌ ஆணையாளர் பார்வையிட்டார்.‌



வெள்ளலூர்‌ உரக்கிடங்கில்‌ குப்பை எடை மேடையில்‌ மக்கும்‌ குப்பை, மக்காத குப்பையை வாகனங்கள்‌ மூலம்‌ கொண்டுவரும்‌போது அவற்றின்‌ எடையைக் கண்டறிய கணினியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுவருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின்போது மாநகரப்‌ பொறியாளா்‌ ஆ.லட்சுமணன்‌, உதவிப்‌ பொறியாளர்‌ ரவிக்கண்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...