கோவை கரும்புக்கடையில் 3 வயது குழந்தை சித்ரவதை: பெற்றோரிடம் போலீசார் விசாரணை!

கோவை: கரும்புக்கடை பகுதியில் 3 வயது குழந்தையை பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கரும்புக்கடை பகுதியில் 3 வயது குழந்தையை பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரும்புக்கடை பகுதியில் ஒரு வீட்டில் மூன்று வயது குழந்தையை அவர்களது பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாகவும் அதனால் அந்தக் குழந்தைக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போத்தனூர் போலீசார் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தொடர்ந்து சம்பவம் நடந்ததாக கூறப்படும் வீட்டிலிருந்த ஆண், பெண்ணைப் பிடித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸ் விசாரணையில் அந்தக் குழந்தையை அந்தத் தம்பதி தத்தெடுத்து வளர்த்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வளர்ப்புத் தாய், தந்தையிடம் போத்தனூர் போலீசாரும், சைல்டு லைன் அலுவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலில் காயங்களுடன் இருந்த குழந்தையை போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...