கோவை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளுக்காக நாளை முதல் தமிழகத்தில் நன்கொடை பெறவிருக்கிறோம் என்று ராஷ்ட்ரிய சேவா பாரதி தலைவர் மானனீய பன்னலால் பன்சாலி தெரிவித்தார்.
கோவை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளுக்காக நாளை முதல் தமிழகத்தில் நன்கொடை பெறவிருக்கிறோம் என்று ராஷ்ட்ரிய சேவா பாரதி தலைவர் மானனீய பன்னலால் பன்சாலிதெரிவித்தார்.
சேவா பாரதி அமைப்பின் அகில பாரத தலைவர் மானனீய பன்னலால் பன்சாலி, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா காலத்தில், சேவாபாரதி சார்பில் கோவையில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் உணவு பொட்டலங்களை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சேவா பாரதியைப் பற்றி இதுவரை அறியாதவர்கள்கூட இந்த பேரிடர் காலத்தில், அமைப்பின் சேவையை அறிந்து பாராட்டினர்.
நேற்று திருப்பூரில் தொழிலதிபர்களைச் சந்தித்து பேசியுள்ளோம். பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள திருப்பூரிலிருந்து, சமூகப் பணிகளிலும் பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கோவையில் இன்று தலைசிறந்த மருத்துவர்களுடனான சந்திப்பு நடந்தது. சேவா ஹெல்த் சென்டர்கள் மூலம் இலவச மருத்துவம் பார்க்கப்படுகிறது.
பொருளாதார நிலையில் குறைந்தவர்களுக்கு,கோவையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இலவச அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் இருக்கும் பகுதிகள் சிலவற்றில் `ட்ரைபல் ஹெல்த் சென்டர்கள்' அமைத்து அவர்களுக்கான இலவச மருத்துவ உதவி வழங்கப்படும்.
ராஷ்ட்ரிய சேவா பாரதியில், 5,07,656 தொண்டர்களுடன் 92,656 சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் இந்தியா முழுவதும் இந்த கொரோனா காலத்தில்,சுமார் 73,81,800 குடும்பங்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சுமார் 4,66,34,000 உணவுப் பொட்டலங்கள் மற்றும்சுமார் 89,23,000 முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் சேவா பாரதி மூலம் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் சிமெண்ட், கம்பிகள் இல்லாமல் வெறும் கருங்கல்லால் கட்டப்படுகிறது. 1000 ஆண்டுகள் ஆனாலும் உறுதியுடன் இருக்கும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல உலக அளவில் போற்றப்படக்கூடிய அளவில் இருக்கப்போகும் இக்கோவிலைக் கட்டுவதற்கு, நாளை முதல்தமிழகத்தில்இருந்து நன்கொடைகள் பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.