கோவை: அங்கலக்குறிச்சி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்து சிக்கி தவித்து வந்த அரிய வகை ஆந்தையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஹர பிரியன். பத்தாம் வகுப்பு மாணவரான இவர் சிறுவயது முதல் இயற்கை ஆர்வலராகவும், வனவிலங்கு ஆர்வலராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று அங்கலக்குறிச்சி கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்த அரிய வகை ஆந்தை தத்தளித்துக்கொண்டிருந்ததைக் கண்டார்.

உடனடியாக மாணவர் ஹரிஹர பிரியன் ஆந்தையை மீட்டு பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் ஆந்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பறக்கவிட்டனர். பள்ளி மாணவனின் இந்த செயலுக்கு ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.