கோவை: மத்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையமும், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவும் இணைந்து இரண்டு நாள் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம் நடத்த உள்ளன. இந்த முகாம், திருப்பூரில் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

இது குறித்து, கோவையில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலைய துணை இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது:
ஒரு தொழிலை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?, என்ன மாதிரியான தொழில்களுக்கு சந்தை வாய்ப்பு உள்ளது? வங்கிகள் மூலம் எவ்வாறு கடன் பெறுவது? திட்ட அறிக்கை எவ்வாறு தயாரிப்பது?, மற்றும் மத்திய மாநில அரசின் தொழில் திட்டங்களை மானியத்துடன் கூடிய கடன் பெறுதல், போன்ற அணைத்து தகவல்கள் குறித்தும் இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எனவே, தொழில் முனைய ஆர்வமுள்ள இளைஞர்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இதற்கு கல்வி தகுதி பத்தாம் வகுப்பு. இதற்கு எந்த கட்டணமும் இல்லை. இதில் கலந்து கொள்பவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த முகாம் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் கொங்கு ஸ்கூல் அருகில் உள்ள சரண்யா பேஷன் இன்ஸ்டியூட் என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்பவர்கள் முன்கூட்டியே தங்களது பெயர்களையும் தொலைபேசி எண்ணையும் கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் - 9442241361, அலுவலக எண் 0422-2233956 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு விஜயகுமார் கூறியுள்ளார்.