திருப்பூர்: போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வலியுறுத்தி திருப்பூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தினர். இந்தச் சூழலில் தமிழக அரசும், போக்குவரத்துக் கழகமும் பொங்கல் பண்டிகைக்கு பின்பு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்திருந்தது.

தற்போது பொங்கல் பண்டிகை முடிந்த சூழலில் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தாததைக் கண்டித்தும் உடனடியாக பேச்சுவார்த்தை துவங்கவேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் - காங்கேயம் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பாக அனைத்து சங்க போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.