கோவை: மின்சாரம் சேமிக்கும் பம்புகளைத் தயாரிப்பதில் முன்னோடியான சி.ஆர்.ஐ., 2020-ம் வருடத்துக்கான தேசிய மின்சார சேமிப்பு விருதை இந்திய அரசிடமிருந்து 6-வது முறையாக பெற்றுள்ளது.

சி.ஆர்.ஐ.பம்ப் நிறுவனம் அதைப் பயன்படுத்துபவர்கள்மூலம் இதுவரை 17,000 மில்லியன் யூனிட்களுக்கும் அதிகமாக மின்சாரத்தை சேமித்துள்ளது. மின்சாரம் சேமிப்பது மட்டுமன்றி கார்பன் படிவதையும் சுமார் 14 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு குறைத்துள்ளது. மின்சக்தியைச் சேமிக்கும் பம்புகள் தயாரிப்பதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்ட சி.ஆர்.ஐ. பொறுப்புடன் செயல்படுவதுடன் அதேயளவு புதுமையோடும் செயல்படக்கூடியது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
நட்சத்திரக் குறியீடு பெற்ற பம்புகளைத் தயாரிப்பதற்கு பெயர்பெற்ற சி.ஆர்.ஐ. இதுவரை நாடுமுழுவதும் 1.65 மில்லியனுக்கும் அதிகமான பம்புகளை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இதனால் விவசாயம், தயாரிப்பு தொழிற்சாலைகள் என பல பிரிவினரும் அதிகளவில் மின் சேமிப்பு செய்ய உதவியிருக்கிறது.
இந்த விருதை மத்திய மின்சக்தி துறை மந்திரி ஆர்.கே.சிங் வழங்க, சி.ஆர்.ஐ குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் ஜி. செல்வராஜ் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-
மின்சாரம் சேமிக்கும் அதிக திறன் வாய்ந்த பம்புகளைத் தயாரித்ததற்காக இந்த என்.இ.சி. தேசிய விருதை சி.ஆர்.ஐ ஆறாவது முறையாகப் பெற்றிருக்கிறது. இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளர்களும் இந்த நாடும் பெருமளவு ஆற்றலையும் செலவினங்களையும் மிச்சப்படுத்த உதவி செய்துள்ளது.
இந்த விருதை இந்த வருடம் ஆறாவது முறையாக, அதிலும் நான்கு முறைகள் தொடர்ந்து பெற்றிருக்கிறோம் என்பதை மிகவும் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். மின்சாரம் சேமிப்பதில் எங்களது விடாமுயற்சியை அறிந்து அதைப் பாராட்டியதற்காக இந்திய அரசாங்கத்துக்கு நன்றி.
இன்னும் அதிகம் உத்வேகத்துடன் வேலை செய்து எங்கள் திறமைகளை மெருகேற்ற இது எங்களை ஊக்குவிக்கிறது. எங்கள்மீது நம்பிக்கை வைத்து எங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் ஆதரிக்கும் எங்களது வாடிக்கையாளர்கள், டீலர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களிடம் உள்ள மிகச் சிறந்ததை வெளியே கொண்டுவர உதவிய எங்களது ரிசர்ச் அண்ட்டெவலப்மென்ட் பிரிவு, பொறியியலாளர்கள், நிர்வாகம் மற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.