உஷார்..! கோவை அருகே அதிர்ஷ்டக்கல், பழைய 500, 1,000 ரூபாய்கள் மாற்றி தருவதாக கூறி பணம் பறிக்க முயன்ற 22 பேர் கைது
கோவை: கோவை அருகே அதிர்ஷ்டக்கல், பழைய 500, 1,000 ரூபாய்கள் மாற்றி தருவதாக கூறி பணம் பறிக்க முயன்ற 22 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் 4 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை அருகே அதிர்ஷ்டக்கல் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை வங்கி அதிகாரிகள் மூலமாக மாற்றிகொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்க முயன்ற 22 பேரையும் 4 காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் ரியாஸ் என்பவர் மொபைல் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த21 ஆம் தேதி பெருமாள் செட்டி வீதியில் உள்ள என் ஆர் எம் லாட்ஜ் முன்பு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, உசிலம்பட்டியை சேர்ந்த மூக்கையா, திருப்பூரைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் ரியாசிடம் தங்கள் செல்போனில் இருந்தஅதிர்ஷ்ட கல் சம்பந்தமான வீடியோவை காட்டினர்.
அதுபோக, கட்டுக்கட்டாக பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய்கள் கேரளாவில் இருப்பதாகவும் கோயம்புத்தூரில் உள்ள வங்கி மூலமாக அதை நாம் மாற்றிக் கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறி ரியாசிடம் இருந்து 5 ஆயிரம் பணத்தையும் பெற்று சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, ரியாஸ் இதுகுறித்து தனது நண்பர்களிடம் கூறினார். அப்போது நண்பர்கள் இது மோசடி கும்பல் கவனமாக இருக்கவும் என்று அவரை எச்சரித்தனர். இந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதி மாருதி காரில் அந்த கும்பலை சேர்ந்த நபர்கள் வந்தனர். அப்பொது, ரியாஸ் தனது நண்பர்களுடன் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
அங்கு, காரில் வந்த 4 பேர், 5 லட்சம் பணம் கேட்டிருந்தோம் எங்கே என்று கேட்டனர். அதற்கு, ரியாஸ்முதலில் அதிர்ஷ்ட கல்லையும், பணத்தையும் காட்டுங்கள், பின் பணம் தருகிறேன் என்று கூறினார். அதற்கு அவர்கள் குஞ்சுபாளையம் அருகே உள்ள சுடுகாடு அருகே எங்கள் நண்பர்கள் நிற்கிறார்கள் அங்கு செல்வோம் என கூட்டிச் சென்றனர்.
அங்கு சென்றவுடன் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியது. அப்போது அங்கு விவசாய நிலங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் உதவியோடு 5 பேரையும் மடக்கி பிடித்தனர்.
மாருதி காரை விட்டுவிட்டு மற்றவர்கள் ஓடிய அவர்களை, ரியாஸ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை காரில் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர்கள் நவீன் ஆனந்த், ரஷீத், அஜித் பட்டேல், சுதீஷ், பைசல் என்று தெரியவந்தது. இதனைக் கேள்விப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு, உத்தரவின் பெயரில் மீதி உள்ள கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மீதமுள்ள 17 எதிரிகள் பொள்ளாச்சி ஆண்கள் பள்ளி மைதானத்தில் கார்களில் நின்றுகொண்டிருந்தனர் என்ற தகவல் கிடைக்கப்பெற்றது. அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் அதிர்ஷ்டக்கல் கும்பல் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 கார்கள், போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.