மேட்டுப்பாளையம் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..! ரூ.30 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் சேதம்!

கோவை: கோவை மேட்டுப்பாளையம் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை எம்.ஆர்.டி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (38). கடந்த 20 வருடமாக பிளாஸ்டிக் குடோன் வைத்து பிளாஸ்டிக் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.



இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு குடோனிலிருந்து திடீரென்று புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பிடித்து ஏரியை தொடங்கியது. அருகில் அதிகமாக வீடுகள் உள்ளதால் உடனடியாக மேட்டுப்பாளையம் காவல்துறை தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடி வந்தனர்.



மேலும் அருகில் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருப்பதால் அங்கு ஒரு சில வீடுகளிலும் லேசாக தீ பிடித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...