கோவையில், 2 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி: இரும்புக்கடை உரிமையாளர் கைது

கோவை: கோவையில் தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் ஏமாற்றி வந்த நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் ஏமாற்றி வந்த நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இதே பகுதியில் ‘சன்ரைஸ் என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் இரும்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு மோசடி நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன்பேரில் ஜி.எஸ்.டி. இணை கமிஷனர் விஜயகிருஷ்ணவேலன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தார் இரும்புப் பொருட்களை விற்பனை செய்ததாக போலி பில் தயாரித்து அதன் மூலம் ரூ.2 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இத்தகவல் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...