சத்தியமங்கலத்தில், வனவிலங்குகளால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு இடைக்கால நிவாரண உதவித்தொகை!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், வனவிலங்குகளால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கான இடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.


சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், வனவிலங்குகளால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கான இடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், மலைகிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கால்நடைகளை மேய்த்து வருகின்றனர். இந்தச் சூழலில், ஆடு, மாடு மற்றும் எருமை போன்ற கால்நடைகள் அவ்வப்போது புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகி இறந்துபோக நேரிடுகிறது.

இதுபோன்ற திட்டம் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மாரியம்மா தொண்டு அறக்கட்டளை மூலமாக செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மனித வனவிலங்கு உறவினை மேம்படுத்த வாய்ப்புள்ளதாகவும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசனூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த தொடக்க விழாவில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமை வன பாதுகாவலரும், கள இயக்குனருமான நிகார் ரஞ்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-



வனம் என்பது மக்களுடையது மட்டுமல்லாமல் மக்கள் வாழ்வதற்கு தேவையான நீர், சுத்தமான காற்று மற்றும் பல வளங்களை வழங்கக்கூடியது. ஆனால், சில நேரங்களில் வனத்தயொட்டி வாழும் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் மோதல் ஏற்படுகிறது. அப்போது சில இழப்புகள் நேரிடுகின்றன.

அவ்வாறான இழப்புகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கும் திட்டம் வனத்துறை செயல்பாட்டில் உள்ளது. எனினும் தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் இணைந்து தொடங்கியிருக்கும் இந்த நிவாரணத் திட்டமானது மக்களுக்கு உடனடியாக பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

இத்திட்டத்தின் தொடக்கமாக, நான்கு பயனாளிகளுக்கு தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக இடைக்கால நிவாரணத்துக்கான காசோலையை நிகார் ரஞ்சன் வழங்கினார். இத்திட்டமானது வனத்தை நம்பி வாழும் மக்களை இணைத்து காட்டையும், கட்டுயிர்களையும் பாதுகாப்பது சாத்தியம் என்பதற்கான எடுத்துக்காட்டு என்று தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்க செயலாளர் பாலன் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் மக்களுக்கு பயனளிப்பதோடு மட்டுமல்லாமல் வனம் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பில் அவர்களது பங்கேற்பை மேம்படுத்தும் என்று உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தை சேர்ந்த ஸ்டீபன் அஜய் கூறினார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் கோட்டத்தின் இணை இயக்குனரும், மாவட்ட வன அலுவலருமான தேவேந்திர குமார் மீனா இத்திட்டத்தை பாராட்டினார். இவ்விழாவில், மலைவாழ் பழங்குடி மக்களின் இசை கலை மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும்விதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் பழங்குடி மக்களின் பிரத்தியேக உணவு வகைகளான ராகி களி, சாமை சோறு, கீரை போன்றவை விருந்தினருக்கு வழங்கப்பட்டது. தாளவாடி தொகுதி மேம்பாட்டு அதிகாரி, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். இத்திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் மலைகிராம மக்கள், 8838332124 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...