திருப்பூர்: திருப்பூரில் பத்திரப்பதிவு கட்டணத்தில் போலி ரசீது மூலமாக மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நிலம் வாங்குவது, விற்பது, கிரையம் செய்வது, பெயர் மாற்றுவது, திருத்தம், வில்லங்கம் உட்பட பல்வேறு பணிகளுக்காக தினமும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு துறையைச் சார்ந்துள்ளனர்.

பணப்புழக்கம் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்டம், பிற மாவட்டங்களை காட்டிலும், பத்திரப்பதிவு அதிகம். நெருப்பெரிச்சல் பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம், இணைப்பதிவாளர் அலுவலகம் எண் -1 மற்றும் 2, தொட்டிபாளையம் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இதனிடையே, பத்திரப்பதிவு அலுவலகத்தில் 'ஆன்லைன்' மூலமாக கட்டப்படும் பதிவு கட்டணத்துக்கு போலி ரசீது மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
இதில் சொத்து கிரயம், விற்பனை உட்பட பல்வேறு பணிகள் தொடர்பாக அலுவலகத்துக்கு வரும் நபர்களிடம் நேரடியாக பணத்தை பெற்று கொண்டு, ஏற்கனவே பணத்தை கட்டியவர்களின் விவரங்களை காட்டி கோடிக்கணக்கான ரூபாயை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.
இது குறித்து தமிழக பதிவுத்துறை தலைவர் சங்கர், திருப்பூரில் ஆய்வு நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ஜெகதீசன், திருப்பூரில் ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஏழு பேர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட பத்திரப் பதிவாளர் ராமசாமி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் மத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திருப்பூர் இணை சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்த சங்கர் மற்றும் தனியார் டைப்பிங் நிறுவனம் நடத்தி வந்த ஜெய்சங்கர் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
இதில் இருவரும் கூட்டாக சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு அரசுக்கு செலுத்தவேண்டிய 68 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.