கோவை: கோவையில் சிறுவன் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை கவனிக்காமல், அனுமதித்த சிறுவனின் தாய் ஒருநாள் கூண்டில் நிற்க வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை, ரத்தினபுரியை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்தாண்டு, பிப்ரவரி 9ம் தேதி நண்பனை அழைத்துக் கொண்டு தனது தாயாரின் ஸ்கூட்டியில் சென்றார்.
இதனிடையே, காந்திபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்து மோதியதில், ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்த 16 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.
பின்னர், இது தொடர்பாக, போலீசார் மற்றும் கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிந்து, பேருந்து ஓட்டுனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
மேலும், 18 வயது நிரம்பாத சிறுவன், ஸ்கூட்டியை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதால், வாகனத்தின் உரிமையாளரான, அவரது தாயார் பாண்டீஸ்வரி மீது தனியாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை ஜே.எம்:8, நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே, இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராமதாஸ், 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி, வாகன உரிமையாளரான பாண்டீஸ்வரியை, நீதிமன்றம் கலையும் வரை, குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து ஒரு நாள் தண்டனையுடன், 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாண்டீஸ்வரி காலை முதல் மாலை வரை நீதிமன்ற குற்றவாளிக்கூண்டில் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டார்.