கோவையில் 32 -வது சாலைப் பாதுகாப்பு வாரம்:.ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை முகாம், வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் தலைமையில் இன்று நடைபெற்றது.
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும்விதமாக இந்தியா முழுவதும் 11 ஜனவரி, 11 2020 முதல் 17 ஜனவரி 2020 வரை சாலை பாதுகாப்பு வாரம் நடக்கிறது. இது 32 ஆவது சாலை பாதுகாப்பு வாரமாகும்.
சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, விபத்தில்லா தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போக்குவரத்துத் துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு
கண் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி, ஐ பவுன்டேசன் மருந்துவ குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.