கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் 400 க்கும் மேற்பட்ட திமுகவினர், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகையின் போது, மக்கள் பணிகளை செய்யாத உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டிப்பதாக திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட திமுகவினர் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து குறிச்சி பிரபாகரன் கூறுகையில்:
உள்ளாட்சித் துறையின் அமைச்சராக இருக்கும் எஸ் பி வேலுமணி, தொண்டாமுத்தூரில் மட்டுமே பணிகளை செய்து வருகிறார். அவருடைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அருகே உள்ள கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுந்தராபுரம் கிணத்துக்கடவு - மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யவில்லை.
சாலைகள் குண்டும் குழியுமாகவும், சீரான குடிநீர் இல்லாமல், பொதுமக்கள் மிகுந்த கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்பகுதிகளில், அமைச்சர் எவ்வித பணிகளையும் செய்யவில்லை என்றும், அதே சமயத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத போதிலும் அதிமுகவினர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு, தற்போதும் கவுன்சிலர்களை போல் உலா வருகிறார்கள், என்று குற்றம் சாட்டினார்.
பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளிடத்தில் பல முறை மனு அளித்தும், எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் நான்கு மாத காலத்தில் திமுக ஆட்சி மலரும் திமுக தலைவர் தளபதி முதல்வராக வருவார், அதிமுக ஆட்சி தூக்கி எறியப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
முற்றுக்கையின் போது, மாவட்ட பிரதிநிதி நிசார் அகமது, வட்டச்செயலாளர்கள் கண்ணாமணி, கிருஷ்ணமூர்த்தி, ரமணி, முரளிதரன், காஜாகான், கோவிந்தராஜ், பகுதி துணை செயலாளர் லட்சுமி, மஞ்சுளா, மாவட்ட துணை அமைப்பாளர் வானவில் கனகராஜ், அனீபா, பிரேம்குமார் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.