கோவை: கோவையை அடுத்த சிறுவாணி சாலை போளுவாம்பட்டி நரசிபுரம் பிரிவு பகுதியில் யானை மிதித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போளுவாம்பட்டி நரசிபுரம் பிரிவு பகுதியில் பூண்டி மத்தி பீட்டுக்கு உட்பட்ட நரசீபுரத்தில் இருந்து தாமனம்புதூர் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் உள்ள ஓடை அருகில் சுமார் 40 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் நபர் காட்டு யானை தாக்கி இறந்து கிடந்ததுள்ளார்.
இன்று காலை 7:30 மணி அளவில் சடலத்தை பார்த்த, அப்பகுதியில் உள்ள விஸ்வாமித்திரர் கோவில் பூசாரி, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனவர் ஆசிப், சம்பவ விசாரணை நடத்தினார்.
முதல் கட்ட விசாரணையில், இறந்த நபர் இந்த சுற்றுவட்டாரப் பகுதியை சார்ந்தவர் அல்ல என்பதும் அவர் அடிக்கடி சம்பவ இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விசுவாமித்திரர் கோவில் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வார் என்ற தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
கோவில் பூசாரி கணேஷ் என்பவரிடம் விசாரணை செய்ததில், இறந்த நபர் எல் ஐ சி காலனி பகுதியை சேர்ந்த கார்த்திக்(45) என்பதும் இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் சாராயம் குடித்து விட்டு இங்கு வந்து சுற்றிக் கொண்டிருப்பார் என்றும் பூசாரி தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் தாமணம் புதூர் கிராமத்தில் ஒரு ஒற்றை காட்டு யானை சுற்றிக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆல்பா இரவு ரோந்து பணி குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காட்டு யானையை வேட்டைக்காரன் கோவில் வனப்பகுதிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
எனவே, இறந்த கார்த்திக் யானை அதற்கு முன்பே யானை தாக்கி இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக வனவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சடலத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.