பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர ரஜினி மன்ற நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

பொள்ளாச்சியில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து நிர்வாகிகள் விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர தி.மு.க. பொறுப்பாளர் வரதராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி நகர தி.மு.க. துணைச் செயலாளர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர ரஜினி மன்ற துணைச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தி.மு.க.வில் இணைந்த புதிய நிர்வாகிகள் அனைவருக்கும், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட மீனவரணி அமைப்பாளர் மணிகண்டன், தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் கன்னிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.