வீட்டின் முன் நிறுத்தி வைத்த இருசக்கர வாகனம் திருட்டு: சி.சி.டி.வி. உதவியுடன் போலீசார் விசாரணை!

திருப்பூர்: வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து சி.சி.டி.வி. காட்சியைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து சி.சி.டி.வி. காட்சியைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜய். இவர்வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின்முன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார் . திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தைக் காணவில்லை.

இதையடுத்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பார்த்தபோது, அஜய் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றபிறகு அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் சிறிதுநேரம் அங்குமிங்கும் நோட்டமிடுவது பதிவாகியிருந்தது.



பின்னர் அந்த மர்ம நபர் திடீரென தனது கையில் வைத்திருந்த சாவியைக் கொண்டு இரு சக்கர வாகனத்தின் லாக்கை திறந்தார்.



லாக்கைத் திறந்தவுடன் மீண்டும் சாலையில் ஆள் நடமாட்டத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் தள்ளிச் செல்வது கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் அஜய் திருப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...