கோவையில், பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா போக்சோ சட்டத்தில் கைது!

கோவை: கோவையில் 72 வயது தாத்தா தனது பேத்தியை வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். இந்நிலையில் அவர் பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் தாத்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் 72 வயது தாத்தா தனது பேத்தியை வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். இந்நிலையில் அவர் பேத்தியை பாலியல் பலாத்காரம்செய்ததாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் தாத்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-ஈரோடு, விஜயமங்கலம், ஊத்துக்குளி ரோடு குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பிரபு நாகராஜ். இவரது மனைவி லோகநாயகி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.10 வயது மற்றும் 8 வயது குழந்தைகள்.

இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் 2 பேத்திகளையும் கோவை ஒண்டிப்புதூர் கிருஷ்ணசாமி நாயுடு வீதியில் வசிக்கும் பிரபு நாகராஜின் தந்தை சுப்பிரமணியன் (வயது 72) என்பவரிடம் ஒப்படைத்தனர். அவர்களை பாதுகாத்து வந்த சுப்பிரமணியன்10 வயது மதிக்கத்தக்க பேத்தியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தச் சிறுமி தாயார் லோகநாயகியிடம் கூறினார். அதைத் தொடர்ந்து லோகநாயகி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (கிழக்கு) புகார் செய்தார். இதையடுத்து தாத்தா சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக தன்னுடைய சொந்த பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...