கோவை: தமிழகத்தின் பாரம்பரியமிக்க விழாக்களில் ஒன்றான நிலாச்சோறு திருவிழாவை, கோவை ஆவரம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள் சிறப்பாக கொண்டாடினர்.
கோவை: தமிழகத்தின் பாரம்பரியமிக்க விழாக்களில் ஒன்றான நிலாச்சோறு திருவிழாவை, கோவை ஆவரம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள் சிறப்பாக கொண்டாடினர்.
பழமை வாய்ந்த இந்த பாரம்பரிய பண்டிகையை கொண்டாடி வரும் ஆவரம்பாளையம், துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள்,
"தமிழ் பண்பாட்டு கலாச்சார மையம் மற்றும் மனமகிழ் மன்றம்" எனும் அமைப்பை உருவாக்கி, இந்த பண்டிகையை, தைப்பூசம் நாளன்று ஆண்டுதோறும், கொண்டாடி வருகின்றனர்.
தைப்பூசத்துக்கு 7 நாட்கள் முன்பாகவே நிலவுக்கு மரியாதை செய்யும் வகையில் நிலாச்சோறு விழாவை கொண்டாடி வருவதாக, அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, இன்று நடைபெற்ற நிலாச்சோறு விழாவில், சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை, நிலா வெளிச்சத்தில் பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த நித்யாராணி என்ற பெண் கூறுகையில், இது போன்ற விழாக்களை பலரும் மறந்து வருகின்றனர். இது போன்ற விழாக்களை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், ஆண்டுதோறும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறோம். வரும் காலங்களில் குழந்தைகளும் பாரம்பரியமான இந்த நிலாச் சோறு விழாவை கொண்டாட வேண்டும், என்றார்.