கோவை: திண்டுக்கல்லில் நீதிமன்ற உத்தரவின்படி கிரிவலம் சென்ற இந்து முன்னணியின் உடைய மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை இந்து முன்னணி சார்பாக இன்று மாலை கோவை காந்திபுரம் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற, 100 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் கோவில் கிரிவலத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துதிருந்தது எனவும் இருப்பினும், ஊர்வலத்தை நடத்த முயன்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்ரா சுப்ரமணியம் கைது செய்யப்பட்டார், என்று இந்து முன்னணியர் தெரிவித்தனர்.

எனவே, அவர் கைதை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் காந்திபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற, 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, பல்வேறு கோஷங்களை எழுப்பிய அவர்கள், காவல்ன்துறையினர் ஒரு தலைப்பட்சமாக நடப்பதாகவும் நீதிமன்ற உத்தரவு இருந்தும், மாநில தலைவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது எனவும் கண்டனங்களை தெரிவித்து, இது குறித்து போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்தனர்.
போராட்டதிற்கு, அமைப்பின் மாவட்ட தலைவர் கே.தசரதன் தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் முன்னிலை வகித்தார். ஆ.கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் M.ஜெய்சங்கர் மாநில நிர்வாககுழு உறுப்பினர் த.குணா மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.