கோவை: கோவையில் நடைபெற்ற மனித நேய வார விழாவில் பங்கேற்ற மாவட்ட எஸ்.பி அருளரசு மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.
கோவை: கோவையில் நடைபெற்ற மனித நேய வார விழாவில் பங்கேற்ற மாவட்ட எஸ்.பி அருளரசு மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக அரசின் உத்தரவுப்படி கோவை மாநகரம் மற்றும் கோவை மாவட்ட காவல் துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக மனித நேய வார விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்த விழாவுக்கான ஏற்பாட்டினை அய்யாசாமி கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மனிதநேயம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகளில் கலந்து தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டினர்.
இந்த வார விழாவில் உதவி ஆணையர் செல்வம் வரவேற்றுப் பேசினார். அரசு வழக்கறிஞர் மாரிமுத்து, கண்காணிப்புக் குழு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் பலர் தங்களுடைய மனிதநேய கருத்துக்களை மாணவ மாணவிகளிடையே எடுத்துக் கூறினார்.
பின்னர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவுக்கு தலைமை தாங்கி மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.

அப்போது, அவர் மனிதநேயம் குறித்து மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்துக் கூறினார். ஜாதி, மத, இன, மொழி இவைகளை கடந்து சமுதாயத்தோடு ஒன்றாக இணைந்து வாழும்போது தான் நம் வீட்டின் அருகாமையில் வசிக்கக்கூடிய ஒருவருக்கு ஒரு ஆபத்து என்கிற போது சாலையில் செல்லும் பொழுது விபத்தில் சிக்கி விட்டால் உடனடியாக அவரை மீட்டு காப்பாற்றும் போதும் அவர் நமது உறவுக்காரர் என்று பார்ப்பது கிடையாது. நம்மை அறியாமலேயே நம்முடைய மனது அந்த காரியத்தில் முழுமையாக செயல்படும். இதுவே மனிதநேயம் ஆகும்.
மனிதநேயம் என்பது நம்முடைய ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆழமான அன்பாக வேரூன்றியுள்ளது. மனிதநேயம் இருப்பதால் மட்டுமே இந்த பூமி இன்னும் நம்மை தாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் மாணவ-மாணவியர்கள் அனைத்தையும் கடந்து மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு கணமும் செயல்படவேண்டும் இவ்வாறு கூறினார்.

இறுதியாக மனிதநேய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தினார். காவல் ஆய்வாளர் கனகராஜ் நன்றியுரை வழங்கினார்.