வால்பாறையில், குடிபோதையில் தகராறு செய்த அக்கா கணவரை தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை!

வால்பாறை: குடிபோதையில் தகராறு செய்த அக்கா கணவரை தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.


கோவை: குடிபோதையில் தகராறு செய்த அக்கா கணவரை தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

வால்பாறை காவல் நிலைய சரகத்தில் உள்ள காமராஜர் நகரில் குடியிருப்பவர் அனுசுயா. கூலித்தொழிலாளி. இவரது கணவர் பெயர் கனகரத்தினம் (வயது 45). கட்டட கூலி வேலை செய்து வருகிறார். அனுசுயாவின் தம்பி பழனி ராஜா (வயது 31) திருமணமாகாத இவர் அனுசுயாவின் வீட்டில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வந்தார்.

நேற்று இரவு 10 மணியளவில் பழனிராஜா வேலை முடிந்து தனது அக்கா வீட்டுக்கு வந்தார். அப்போது. தனது அக்காவின்கணவர் கனகரத்தினம் குடிபோதையில் அக்காவிடம் தகராறு செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, ஏன் மாமா குடித்துவிட்டு வந்து அக்காவிடம் தகராறு செய்கிறீர்கள், போய் படுத்து தூங்குங்கள். நாளைக்கு வேலைக்கு போகவேண்டுமல்லவா? என்று கூறியுள்ளார்.

அதற்கு கனகரத்தினம், `நான் அப்படித்தான் சத்தம் போடுவேன், நீ என்ன பண்ணுவ...' என்று சொல்லிவிட்டு, பாத்ரூமிற்கு சிறுநீர் கழிக்கச் சென்றார். திடீரென சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துவந்து,பழனிராஜாவின் இடது மார்பில் கத்தியா குத்தினார். இதைப் பார்த்த அனுசுயா சத்தம் போடவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன், பழனி ராஜாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாகக் கூறினார். அவருடைய உடல் வால்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. கனகரத்தினத்தை, வால்பாறை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...