கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் விரல் காயத்துக்காக சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் விரல் காயத்துக்காக சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹேமவர்ணா (வயது 7). கதவிடுக்கில் இவரது கை சிக்கியதால் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில் நேற்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதில் தங்களது மகளின் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் கூறும்போது, சிறுமிக்கு தலையில் ரத்தக் கசிவு இருந்ததாகவும், அதனால்தான் அவர் இறந்ததாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் பிரேத பரிசோதனையின் முடிவில்தான் அதற்கான முழு காரணம் தெரியவரும் என்றார்.