கோவை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் கடவுளாகிய, முருகப் பெருமானை சிறப்பித்து, தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில், மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழாவிற்கு இந்த ஆண்டு முதல் அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இன்று தைப்பூச விழா என்பதால் கோவையில் உள்ள அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், போன்றவைகள் செயல்படவில்லை. அங்கு ஒரு சில அலுவலர்கள் மட்டுமே வந்து அவர்களின் சொந்த விருப்பப்படி பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால், அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. ரேஷன் கடை மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடை என்பதால், அவை அரசு விடுமுறை நாட்களிலும் இயங்குவது வழக்கம். தைப்பூசத்தை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. சில பொது விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதனால் தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவிக்குமாறு ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தன. அதை ஏற்று அரசு, ரேஷன் கடைகளுக்கு தைப்பூசம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று பணியில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் வார விடுப்பில் உள்ள ஊழியர்கள் வேறொரு நாளில் மாற்று விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. தைப்பூச விழாவை முன்னிட்டு கோவை மருதமலை முருகன் கோவிலில் இன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்று வருகின்றன.