ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா இந்த ஆண்டு நடக்குமா? பக்தர்கள் குழப்பம்!

கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததால் இந்த ஆண்டு விழா நடக்குமா? என பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததால் இந்தஆண்டு விழா நடக்குமா? என பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்வது வழக்கம். விஷேச நாட்கள் மட்டுமல்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்துசெல்வார்கள்.

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையன்று கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கும்.

குண்டம் விழா துவங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்பே குண்டம் விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு குண்டம் விழா குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி தை அமாவாசை வரவுள்ளது. ஆனால், தற்போதுவரை குண்டம் விழா குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், பக்தர்கள் குண்டம்விழா நடக்குமா, நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

கொரோனாவின் பாதிப்பு இன்னும் குறையாததால் குண்டம் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி கோயில் நிர்வாகம் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, குண்டம் விழா நடத்துவது குறித்த மாவட்ட நிர்வாகத்தினரே முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...