ஆனைமலையில் 16 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த 3 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது
பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று இளைஞர்களை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
ஆனைமலையை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், ஆனைமலையை சேர்ந்த மூன்று பேருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, அவர்களுடன் செல் ஃபோனில் பேசி பேசிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி சிறுமியின் தந்தை ஆனைமலை காவல்நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், கடந்த 19ம் தேதி பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி தன்னை ஆனைமலையை சேர்ந்த மூன்று பேர் தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, விசாரணை நடத்தி வந்த போலீஸார் ஆனைமலையை சேர்ந்த ஹரீஸ் (23), சூர்யா (23), பிரவீன் (23) ஆகிய மூன்று பேரை புதன்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாதவர்கள் என்று கூறப்படுகிறது.