பொள்ளாச்சி பாலியல் வழக்கு மேலும் ஒரு பெண். நீதிபதி முன்பு ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இதுவரை 5 பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், கோவையைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தார். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

அந்தப் பெண் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது எனவும் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் சிக்குவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு பலர் புகார் அளிக்க முன்வராமல் இருந்தனர். இந்த நிலையில், ஒரே ஒரு பெண் மட்டும் துணிச்சலாக புகார் செய்தார். அதன் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, அரசியல் பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறி அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.

கடந்த ஒன்றரை வருட கால சிபிஐயின் விசாரணையில் கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு அதிமுக பிரமுகர் அருளானந்தம் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு கோவை செட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்தது.

இந்த நிலையில் சிபிஐ தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு தரப்படும், அவர்களுடைய பெயர்கள் ரகசியம் காக்கப்படும், எனவே தைரியமாக வந்து புகார் அளிக்கலாம், என சி.பி.ஐ தெரிவித்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து இன்று ஒரு பெண் வழக்கு சம்பந்தபட்ட வாக்குமூலத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...