கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ குடிநீர் வழங்கும்‌ திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு, ஆணையாளர் உத்தரவு!

கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ குடிநீர் வழங்கும்‌ திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு, ஆணையாளர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ குடிநீர் வழங்கும்‌ திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு, ஆணையாளர் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியில்‌ பிரதான அலுவலகத்தில்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅதிகாரி பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌தலைமையில்‌ நடைபெற்றது.

அப்போது கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ அலுவலர்களுக்கு சில பணிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார்‌. கோவை மாநகராட்சியில்‌ குடிநீர் பணிகளுக்காக குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருகின்றன. குழாய்‌ பதிப்பதற்கோ, கசிவுகளை அடைப்பதற்கோ சாலைகளை தோண்டுவதற்கு முன்‌ மாநகராட்சியின்‌ உரிய அலுவலர்களிடம்‌ தகவல்‌ தெரிவிக்க வேண்டும்.

இதையடுத்தேகுடிநீர்‌ பணிகளுக்காக சாலைகளில்‌ தோண்டப்பட்ட இடங்களில்‌ உடனடியாக சமன்‌ செய்திட வேண்டும். ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ குடிநீர் வழங்கும்‌ திட்டப்பணிகளையும்‌ விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.மதுராந்தகி, செயற்பொறியாளர்‌ பார்வதி, பொறியாளர்கள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழுத்தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌ மற்றும்‌ தொடர்புடைய அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...