கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு, ஆணையாளர் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியில் பிரதான அலுவலகத்தில் அனைத்து மண்டலங்களிலும் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅதிகாரி பெ.குமாரவேல் பாண்டியன்தலைமையில் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பெ.குமாரவேல் பாண்டியன் அலுவலர்களுக்கு சில பணிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார். கோவை மாநகராட்சியில் குடிநீர் பணிகளுக்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. குழாய் பதிப்பதற்கோ, கசிவுகளை அடைப்பதற்கோ சாலைகளை தோண்டுவதற்கு முன் மாநகராட்சியின் உரிய அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதையடுத்தேகுடிநீர் பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட இடங்களில் உடனடியாக சமன் செய்திட வேண்டும். ஆர்.எஸ்.புரம் பகுதியில் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி, செயற்பொறியாளர் பார்வதி, பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுத்தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.