கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.! டில்லியில் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

கோவை: "வேளான் விரோத சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி தலைநகர் டில்லியில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மோடி அரசை கண்டிக்கிறோம் என்று கோஷங்களை எழுப்பி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: "வேளான் விரோத சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி தலைநகர் டில்லியில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மோடி அரசை கண்டிக்கிறோம் என்று கோஷங்களை எழுப்பி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உலகையே அதிரச் செய்துள்ள விவசாயிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

"மத்திய மோடி அரசு விவசாயிகளுக்கு விரோதமாக மூன்று வேளான் விரோத சட்டங்களை இயற்றியுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து பெரும்பான்மை என்கிற சர்வாதிகாரத்தனத்தோடு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை கண்டித்து தலைநகர் டில்லியில் 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரிலும் தொடர்ந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்", என்று தெரிவித்தனர்.

இதனிடையே, இப்போராட்டத்தின் ஒருபகுதியாக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனையேற்று, லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டில்லியில் அணிவகுத்து வந்தனர். அமைதி வழியில் நடைபெற்ற பேரணியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு மத்திய அரசின் கீழ் இயங்கும் டில்லி காவல்துறை விவசாயிகள் மீது கொடூரமான தாக்குதலை தொடுத்தது. இதில் ஒரு விவசாயி பலியானதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்தனர், என்றுண்குற்றம் சாட்டினர்.



ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுபபினர்கள் எஸ்.கருப்பையா, கே.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.அஜய்குமார், என்.பாலமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட செயற்குழு மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...