கோவையில் கூடுதலாக அமைக்கபட உள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு..!

கோவை: கோவை மாவட்டத்தில் கூடுதலாக அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கூடுதலாக அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா அச்சம் காரணமாக 1000 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதனால், கோவையில் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இங்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 48 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல் படி கூடுதலாக 1,574 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, கழிப்பறை வசதி, குடிநீர், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...