கோவையில் கிடப்பில் போடப்பட்ட ஹோப் காலேஜ் உயர்மட்ட மேம்பால பணிகள்; நாளை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் கிடப்பில் போடப்பட்ட ஹோப் காலேஜ் உயர்மட்ட மேம்பால பணிகள்; நாளை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.



 கோவை: திமுக ஆட்சியில் துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஹோப் காலேஜ் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று எம்எல்ஏ நா கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏவுமான நா.கார்த்திக் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்: கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 37 வது வார்டில் தண்ணீர்பந்தல் ரோட்டில் ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக, கடந்த 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், ரூ 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தும் 2 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. 

இதனால், அவ்வழியாக செல்லக்கூடிய ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே,தமிழக அரசு உடனடியாக இந்த மேம்பாலப் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும். 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை, ஜனவரி 28 ஆம் தேதி மாலை 4 மணிக்கு,தண்ணீர்பந்தல் தொழில்நுட்பப் பூங்கா அருகே திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது உடன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து,முரா.செல்வராஜ், கோட்டை அப்பாஸ், ஆனந்தன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...