திருப்பூர் மாவட்டத்தில் மூன்று அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம்முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம்முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் செயல்படும் என தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தன. மாவட்ட சுகாதார துறை சார்பில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22, 23, 24 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு வந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் மற்றும் 1 மாணவி என 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அவர்களிடம் கேட்ட போது, பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர், என்றார்.

மேலும் , பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, அந்த 3 மாணவர்கள் பயன்படுத்திய வகுப்பறைகள் ஒரு வார காலத்திற்கு யாரும் பயன்படுத்தாத வகையில் மூடி வைக்கப்படும், என்றும் தெரிவித்தார்.

மேலும், அரசு கூறியுள்ள அறிவுரைப்படி ஏற்பாடுகள் செய்யப்படு மற்ற மாணவர்களுக்கு வேறு வகுப்பறைகளில் வகுப்பு எடுக்கப்படும் என்றும் , பள்ளி தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...