கோவையில், நாட்டு வெடி குண்டு தயாரித்த நரிக்குறவர்கள் 4 பேர் படுகாயம்!

கோவை: கோவையில் நரிக்குறவர்கள் நாட்டு வெடிகுண்டு (அவுட்டு காய்) தயாரித்தபோது திடீரென வெடித்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை பெரியநாயக்கன்பாளையம், பிரஸ் காலனி, ஜோதிபுரம் நந்தினி காலனி உள்ளிட்ட பகுதியில் நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் மணிமாறன் (வயது 50), ராஜா (வயது 35), ராமதாசு (வயது 30), பூந்தீராய் (வயது 25).

இவர்கள் அனைவரும் இன்று பன்றி உள்ளிட்ட விலங்குகளைப் பிடிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவற்றின் இறுக்கம் அதிகமாகி வெடித்தது. இதில் அவர்கள் 4 பேரும் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் 4 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் அவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...