கர்நாடகா: பெங்களூர் மருத்துவமனை ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா(66) நாளை மறுநாள் விடுதலையாக இருந்த நிலையில், கடந்த 20ம் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, “சசிகலாவுக்கு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் நேற்று முதல் ரத்தத்தில் சர்க்கரை அளவு 205ஆக அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது.
இதனிடையே, சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனையும் படிப்படியாக குறைந்து வருகிறது. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசிக்கும் திறன் சீராக உள்ளது.
மேலும், அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார். சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. உணவும் உட்கொள்கிறார். மற்றவர் உதவியுடன் நடக்கிறார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.