திருப்பூர்: திருப்பூர் பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையைச் சேர்ந்த தாஜ்தீன் அசினா தம்பதியினரின் மகன் மஹபூப் பாஷா தாராபுரம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் விளையாடச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதனிடையே, 3 நாட்கள் ஆகியும் அவரது உடல் மீட்கப்படவில்லை .
தீயணைப்புத்துறையினர் ஒரு நாள் மட்டுமே தேடி வந்த நிலையில், தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதாக கூறி தேடுதலை நிறுத்தியுள்ளனர்.

ஆகவே, மாவட்ட நிர்வாகம் ஏ பி வாய்க்காலில் தண்ணீர் செல்வதை நிறுத்தி தனது மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர்.